10 கிலோ அரிசிக்காக... தாயை கோடரியால் வெட்டிக் கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம்

அரிசி தர மறுத்த தாயை, மகன் கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-01-24 19:19 IST
10 கிலோ அரிசிக்காக... தாயை கோடரியால் வெட்டிக் கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம் 

சரத்சந்திரபூர்,

ஒடிசா மாநிலம் சரத்சந்திரபூரில் அரிசி தர மறுத்த தாயை, மகன் கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோஹிதாஸ் சிங் என்பவருக்கும் அவருடைய சகோதரர் லட்சுமிகாந்த் சிங் என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் ரோஹிதாஸ் அவருடைய தாயாரிடம் நேற்று 10 கிலோ அரிசி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவரது தாய் ராய்பரி சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த ரோஹிதாஸ் கோடரியால் தனது தாயை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் கோடரியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு பிஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமிகாந்த் சிங் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்