தூக்குப்போட்டு நர்சிங் மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-12-19 21:24 GMT

கோப்புப்படம்

கோழிக்கோடு,

கோழிக்கோடு அருகே நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோட்டயத்தைச் சேர்ந்த லட்சுமி ராதாகிருஷ்ணன் (21) என்ற மாணவி, அரசு செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள விடுதியில் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்பது தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்கு பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார் மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்