அசாமில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
அசாமில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

திஷ்பூர்,
அசாமில் உள்ள கச்சார் மாவட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சில்கார் ஐஸ்வால் பைபாஸ் சாலையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்றில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 9 கோடி மதிப்புள்ள யாபா மாத்திரைகளை போலீசார் கையகப்படுத்தினர்.
இதில் மொத்தம் 30 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் மீட்டனர். மேலும் இந்த மாத்திரைகளில் மெத்தபெட்டமைன் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் கடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.