மோடி பதவியேற்பு விழா :அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் மந்திரிகளாக பதவியேற்பு
பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இன்று பிரதமராக மோடி பொறுப்பேற்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மோடியின் பதவியேற்பு விழா இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது.
ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல், ஹெச்டி குமாரசாமி, தர்மேந்திர பிரதான், ஜித்தன் ராம் மாஞ்சி, ராஜீவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், தெலுங்கு தேசம் எம்.பி., ராம்மோகன் நாயுடு, பிரஹலாத் ஜோஷி, கிரிராஜ் சிங், அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜு,
ஹர்தீப் சிங் புரி, மன்சுக் மாண்டவியா, ஜி.கிஷன் ரெட்டி, சிராக் பஸ்வான், ராவ் இந்தர்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜூன் ராம் மேக்வால், ஜெயந்த் பாட்டீல், சிவசேனா எம்.பி. பிரதாப் ராவ், ஜித்தின் பிரசாதா, ஸ்ரீபத் யெஸோ நாயக், பங்கஜ் சவுத்ரி, கிருஷண் பால், ராம்தாஸ் அதாவலே, நித்யானந்த் ராய், ராம்நாத் தாக்கூர்,
அப்னா தளம் எம்.பி. அனுபிரியா படேல், வி.சோமன்னா, தெலுங்கு தேசம் எம்.பி. சந்திரா எஸ். பெம்மசானி, எஸ்.பி.சிங் பாகெல், சோபா சிங் கரந்தலஜே, கீர்த்தி வர்தன் சிங், பி.எ.வெர்மா, சுரேஷ் கோபி, எல்.முருகன், அஜய் தம்தா, பண்டி சஞ்சய் குமார், கம்லேஷ் பஸ்வான், பாகிரத் சவுத்ரி, சதீஷ் சந்திர துபே, ஜூவல் ஓரம், அன்னபூர்ணா தேவி, சாந்தனு தாக்கூர் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்
ஜேபி நட்டா,
அமித்ஷா,
சிவராஜ் சிங் சவுகான்
நிர்மல சீதாராமன்
ஜெய்சங்கர்
நிதின் கட்காரி
மனோகர் லால் கட்டார்
ஹெச்.டி குமாரசாமி
தர்மேந்திர பிரதான்
ஜோயல் ஓரம்,
ஜித்தன் ராம் மன்சி
கிரிராஜ்சிங்
அஸ்வினி வைஷ்னவ்
ஜோதிராதித்ய சிந்தியா
கஜேந்திர சிங்
சர்பானந்த சோனாவல்
அன்னபூர்ண தேவி
டெல்லியில் நடைபெறும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் பங்கேற்பு!
பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அரசியல் அமைப்பு கடமை என்பதால் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். ராஜ்யசபா எதிர்க்கட்சித்தலைவராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனது கடமையாகும்” என்றார்.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள பிரதமர் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சராக தான் பதவியேற்கவுள்ளதாக கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபுல் படேலுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மோடி இல்லத்தில் நடந்த தேநீர் விருந்துக்கும் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்குவதாக பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்தவர் பிரபுல் படேல் என்பதால் இணை அமைச்சராக மறுப்பு தெரிவித்துள்ளார். இன்றைய பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வோம்- பாஜக கூட்டணியில் உள்ளோம் என்று அஜித்பவார் தெரிவித்துள்ளார்.
மோடியின் புதிய அமைச்சரவையில் ஸ்மிரிதி இரானி, அனுராக் தாகூர், நாராயண ரானே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது.