வேலைவாய்ப்பின்மை: சரியான தீர்வு காண்பது அவசியம் - மாயாவதி

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப போதுமான வேலைகள் ஏன் இல்லை? என்று மாயாவதி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-08-20 11:45 GMT

புதுடெல்லி,

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

நாட்டில் கடுமையான வேலைவாய்ப்பின்மை மட்டுமல்ல, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே பிளவு உள்ளது.இந்த நிலைமை பொதுமக்களையும், நாட்டின் நலனையும் பாதிக்கிறது. இது கவலைக்குரிய விஷயம் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப போதுமான வேலைகள் ஏன் இல்லை? இதற்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் உத்தர பிரதேச அரசு வேலைவாய்ப்பில் ஏற்றம் இருப்பதாக மிகப்பெரிய விளம்பரங்கள் மூலம் கூறிவருகின்றது. கடின உழைப்பு இல்லாமல் எந்தவகையான சுயவேலைவாய்ப்பையும் ஒரு சாதனையாகக் கருதுவது வேலையின்மை மற்றும் பிற சிக்கல்களைத் தீர்க்காது.

சுமார் 25 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில் 6,50,000-க்கும் அரசு வேலைகள் கோருவது கடலில் ஒரு துளி கலப்பது போன்றது. இதேபோல் மத்திய அளவில் நிரந்தர வேலைகளின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், பல பதவிகள் காலியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இது எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது. மாநிலத்தில் வேலையின்மையைக் கருத்தில் கொண்டு, சரியான தீர்வு காண்பது அவசியம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்