மத்திய பிரதேசம்: விபத்தில் சிக்கிய மிரேஜ் ரக போர் விமானம்

மத்திய பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய போர் விமானத்தில் இருந்து விமானிகள் இருவரும் வெளியே குதித்து உயிர் தப்பினர்.;

Update:2025-02-06 17:36 IST

PTI news

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தின் சிவ்புரி நகரருகே மிரேஜ் 2000 ரக போர் விமானம் ஒன்று திடீரென இன்று விபத்தில் சிக்கியது. 2 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தில் இருந்த விமானிகள் பாதுகாப்பாக உள்ளனர்.

அவர்கள் வழக்கம்போல் மேற்கொள்ளும் பயிற்சிக்காக சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்ததும், அதில் இருந்த விமானிகள் இருவரும் வெளியே குதித்து உயிர் தப்பினர்.

இயந்திர கோளாறால் விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. எனினும், விபத்திற்கான காரணம் பற்றி உறுதி செய்வதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விபத்து நடந்துள்ளது என இந்திய விமான படையும் அதன் எக்ஸ் வலைதளத்தில் உறுதி செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்