நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க கேரள முதல்-மந்திரியும் முடிவு
நிதி ஆயோக்கின் 9வது கூட்டம் நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
திருவனந்தபுரம்,
தேசிய தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொள்ள மாட்டார் என கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்றும், அவருக்கு பதிலாக மாநில நிதி மந்திரி கே.பி.பாலகோபால் செல்ல அனுமதி கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜயன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிக்கப்படுவதற்கு முன்பே முதல்-மந்திரி கடிதம் எழுதியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நிதி ஆயோக்கின் 9வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விஜயன் கலந்து கொள்ளாததற்கு காரணம் தெரியவில்லை.