இமாசலபிரதேசத்தில் கனமழை: மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு - பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

இமாசலபிரதேசத்தில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2024-08-10 04:01 GMT

கோப்புப்படம்

சிம்லா,

இமாசலபிரதேசத்தில் கடந்த ஜூலை 31-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித்தீர்த்தது. சிம்லா, குல்லு, ராம்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது 30-க்கும் மேற்பட்டவர்கள் மாயமானார்கள். அடுத்த நாளில் 6 பேர் பலியானதாக தெரியவந்தது. அடுத்தடுத்த நாட்களில் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்தது.

தற்போது 9 நாட்கள் கழித்து நேற்று 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. சிம்லா மாவட்டத்தின் டோக்ரி பகுதியில் இந்த 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களில் 3 பேர் பெண்கள், ஒருவர் சிறுவன் ஆவார். இந்நிலையில் நோக்லியில் இருந்து மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட குல்லு மாவட்டத்தின் சமேஜ் கிராமத்தில், மாயமான 20 பேரின் நிலை  பற்றி இன்னும் தெரியவில்லை. ராம்பூர் மாவட்டத்தில் மட்டும் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உயிர்ச்சேதங்களுடன், ரூ,802 கோடி அளவில் மற்ற சேதங்களும் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்