முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா காலமானார்
நவீன் சாவ்லா (79வயது) இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.;

புது டெல்லி
இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா. இவர் 2005 முதல் 2009 வரை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். 2009ல் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். நவீன் சாவ்லா தனது பதவிக்காலத்தில் இந்தியாவின் தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிடுவதில் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் நவீன் சாவ்லா (79 வயது) இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார் என்று மற்றொரு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரைஷி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.