மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Update: 2024-06-28 16:47 GMT

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அமலாக்கத்துறை, டெல்லி முன்னாள் துணை மந்திரி மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பி.ஆர்.எஸ். மூத்த தலைவர் கவிதா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை இதுவரை 8 கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இன்று அமலாக்த்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கு உதவி செய்ததாக வினோத் சவுகான் என்ற நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜூலை 1-ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்