மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
மணிப்பூரில் இன்று ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இம்பால்,
மணிப்பூர் மாநிலம் பங்குரா மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர் பகுதியில் இன்று இரவு 7.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள காம்ஜோங் பகுதியில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.