ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா
அமெரிக்கா, ரஷியா, சீனா வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.;

அமராவதி,
இந்தியாவின் ராணுவ வலிமையை மேம்படுத்தும் வகையிலும், பாதுகாப்புத்துறையில் புதிய ஆயுதங்கள், தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், லேசர் ஆயுதத்தை டிஆர்டிஓ இன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த லேசர் ஆயுதம் எதிரி நாடுகளின் டிரோன்கள், ஏவுகணைகள், சிறியரக பீரங்கிகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் வல்லமை பெற்றதாகும். ஆந்திராவின் குர்நூல் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் நடுவானில் பறந்துவந்த டிரோனை லேசர் ஆயுதம் நொடிப்பொழுதில் சுட்டு வீழ்த்தியது.
லேசர் ஆயுதம் பரிசோதனை வெற்றிபெற்ற நிலையில் இந்த ஆயுதத்தை வைத்துள்ளஅமெரிக்கா, ரஷியா, சீனா வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.