டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
டெல்லியில் காற்றின் தரம் 20 நாட்களுக்கும் மேலாக ஆபத்தான நிலையில் உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் காற்றின் தரம் 20 நாட்களுக்கும் மேலாக ஆபத்தான நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் காற்று தரக் குறியீடு (AQI) 420 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 'கடுமையான' பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று காலை புகை மண்டலம் போல காட்சியளித்தது.
டெல்லியில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில், ஒன்பதில் காற்றின் தரம் கடுமையான பிளஸ் பிரிவில் 450ஐ தாண்டியுள்ளது. மற்ற பத்தொன்பது நிலையங்களில் காற்றின் தரம் 400 முதல் 450 வரை கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளன. மீதமுள்ள நிலையங்கள் காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் பதிவாகியுள்ளன. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.