ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பாட்னாவில் அவசரமாக தரையிறக்கம்

டெல்லியில் இருந்து ஷில்லாங் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது.

Update: 2024-12-09 08:28 GMT

File image

பாட்னா,

டெல்லியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை ஷில்லாங் நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் பாட்னாவுக்கு திருப்பி விடப்பட்டது.

இதையடுத்து, விமானம் இன்று காலை 8.52 மணிக்கு பாட்னாவின் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வேறு விமானத்தில் அழைத்து செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பாட்னா விமான நிலைய இயக்குனர் அஞ்சல் பிரகாஷ் கூறுகையில், "ஸ்பைஸ்ஜெட்டின் டெல்லி-ஷில்லாங் விமானம் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்டதால், ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகளுக்கு ஏதுவாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்