கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

மதுபானக்கொள்கை வழக்கில், ஜாமீன் கோரியும், கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Update: 2024-09-13 00:21 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.சி. கவிதா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த மார்ச் 21 ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால ஜாமீன் கொடுத்தது. பின்னர் கடந்த ஜூன் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஜாமீன் கோரியிருந்தார் . விசாரணை நீதிமன்றமானது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீனும் வழங்கியது. சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையாகும் நிலையில் திடீரென சி.பி.ஐ. அவரை கைது செய்தது. மேலும் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான உத்தரவை நிறுத்தி வைத்தது.

இந்த சூழலில் தனது கைதுக்கு எதிராகவும், ஜாமீன் கேட்டும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சூர்யா கந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விசாரணை கடந்த 5-ந்தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்