மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்ட சி.ஆர்.பி.எப். வீரர்
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டார்.;

போபால்,
மத்திய பிரதேச மாநிலம் மிஸ்ரோர் பகுயைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் ரசிகாந்த் வர்மா(35), தனது மனைவி ரேணு மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று குடும்ப தகராறில் தனது மனைவி ரேணுவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இது குறித்து நேற்று அதிகாலை 1.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தனது மனைவி ரேனுகாவை சுட்டுக் கொன்றதாக அவர் கூறியுள்ளார். பின்னர் ரவிகாந்த வர்மா தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த மிஸ்ரோட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது ரவிகாந்த் வர்மாவின் வீட்டின் ஒரு அறையில் தம்பதி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தனர். மேலும் மற்றொரு அறையில் அவர்களுடைய 6 வயது மகன் மற்றும் 2 வயது மகள் அழுதுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.