கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: கன்னடர்களை அழைத்து வர நடவடிக்கை - டி.கே.சிவக்குமார்

கும்பமேளாவில் கலந்துகொண்ட கன்னடர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.;

Update:2025-01-29 22:39 IST
கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: கன்னடர்களை அழைத்து வர நடவடிக்கை - டி.கே.சிவக்குமார்

பெங்களூரு,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நடந்த துயர சம்பவம் குறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தனது 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். கும்பமேளாவில் கலந்துகொண்ட கன்னடர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காயம் அடைந்த கன்னடர்களை பத்திரமாக கர்நாடகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நெரிசலில் பெலகாவியை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இவ்வாறு இவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்