பட்ஜெட் 2025; மூத்த குடிமக்கள், பெண்கள் மீது அதிக கவனம்: இந்திய வர்த்தக சபை துணை பொது இயக்குநர்

மூத்த குடிமக்களின் கடன்கள், காப்பீடுகள் உள்ளிட்டவற்றில் அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது என இந்திய வர்த்தக சபை துணை பொது இயக்குநர் கூறியுள்ளார்.;

Update:2025-02-01 10:30 IST
பட்ஜெட் 2025; மூத்த குடிமக்கள், பெண்கள் மீது அதிக கவனம்:  இந்திய வர்த்தக சபை துணை பொது இயக்குநர்

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்திய வர்த்தக சபையின் துணை பொது இயக்குநர் ஷீத்தல் கல்ரோ பட்ஜெட் பற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது, மத்திய பட்ஜெட் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன என்றார்.

விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள் ஆகியோர் மீது இந்த பட்ஜெட் அதிக கவனம் கொண்டிருக்கும் என கூறியுள்ளார்.

மூத்த குடிமக்கள், அவர்களுடைய கடன்கள், காப்பீடுகள், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றில் அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. பெண்கள் மீதும் அரசின் கவனம் நிறைய உள்ளது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்