தெலுங்கானா: தாறுமாறாக ஓடிய லாரி மோதி 10 வியாபாரிகள் உயிரிழப்பு
தெலுங்கானாவில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 10 வியாபாரிகள் உயிரிழந்தனர்.
ரங்காரெட்டி,
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி உள்ளூர் வியாபாரிகள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரங்காரெட்டி மாவட்டம் அள்ளூர் பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய லாரி, இறுதியாக மரத்தில் மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த லாரி டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.