பீகார்: வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

பாட்னா,
பீகார் மாநிலம் பக்சா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 8 வயது வளர்ப்பு மகளுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முதல் சிறுமி காணவில்லை. இதனால் சிறுமியின் குடும்பத்தினர் இது குறித்து நேற்று இரவு தும்ரான் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பெண்ணின் வளர்ப்பு தாயான சித்தியின் வீட்டில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அவரது அறையில் ஒரு மர்ம பெட்டியினை கண்டுபிடித்தனர். அதனை திறந்து பார்த்தபோது அதில் ஒரு சாக்குப்பை இருந்தது அதை பார்த்த போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் காணாமல் போன சிறுமியின் உடலானது கருகிய நிலையில் இருந்தது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பு வைத்த போலீசார் சிறுமியின் வளர்ப்பு தாயை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பெண்ணின் வளர்ப்பு தாயே சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தீயில் எரித்ததாகவும், சாக்குப்பையில் போட்டு பெட்டியில் மறைத்துவைத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.