நாடாளுமன்ற தேர்தல்: உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி பின்னடைவு
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகிய இருவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.;
ஸ்ரீநகர்,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலையில் 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் -ராஜோரி தொகுதியில் மெகபூபா முப்தி பின்னடவை சந்தித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் மியான் அட்லப் அகமதுவை விட 1,38,303- சதவிகித வாக்குகள் மெகபூபா முப்தி பின் தங்கியுள்ளார்.
அதேபோல ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லாவும் பின் தங்கியுள்ளார். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அப்துல் ரஷீத் ஷேக்கை விட உமர் அப்துல்லா சுமார் 58 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். முதல் சுற்றில் இருந்தே ரஷித் ஷேக் முன்னிலை பெற்று வருவதால் அவர் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.