காதலை ஏற்காத இளம்பெண்... வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ்.. வாலிபர் எடுத்த விபரீத முடிவு

தற்கொலைக்கு முன்பு சந்தோஷ் தனது வாட்ஸ்-அப்பில் தற்கொலை செய்வதாக ஸ்டேட்டஸ் வைத்திருந்தார்.;

Update:2024-06-30 07:59 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கனசாவி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண் இவரது காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, அவர் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் முத்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இளம்பெண் காதலை ஏற்காததால் சந்தோஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு முன்பு சந்தோஷ் தனது வாட்ஸ்-அப்பில் தற்கொலை செய்வதாக ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்