கரும்பு தோட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை

கரும்பு தோட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-08-23 01:01 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கர்வீர் தாலுகா ஷியே கிராமத்தில் பீகாரை சேர்ந்த தம்பதி தங்களது 10 வயது மகளுடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று சிறுமி அதிக நேரம் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளாள். இதனால் சிறுமியின் மாமா அவளை கண்டித்தார். எனவே கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி இரவு வரை வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் மகளை தேடிப்பார்த்தும் கிடைக்காமல் போனதால் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடினர். இதற்கிடையில் நேற்று காலை ராம்நகர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இது காணாமல் போன 10 வயது சிறுமியின் உடல் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை கடத்தி சென்றதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 10 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்