மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது

பதற்றம் நிறைந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-01-31 05:08 IST
மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் 20 மாதங்களுக்கும் மேலாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அங்கு இன்னும் வன்முறை முழுமையாக ஓய்ந்தபாடில்லை. தடை செய்யப்பட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

அவர்களை ஒடுக்கும் விதமாக பதற்றம் நிறைந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 நாட்களில் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 7 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்