கட்டிட இடிப்பு விவகாரம்: வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

2019ம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-11-06 10:23 GMT

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் கடந்த 2019ம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த கட்டிட இடிப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை வந்தது.

அப்போது, உத்தரபிரதேச அதிகாரிகளின் அணுகுமுறையை கடுமையாக குறைக்கூறிய நீதிபதிகள், 2019ம் ஆண்டு சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு உ.பி. தலைமை செயலாளரை நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்