உத்தரபிரதேசம்: சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன.

Update: 2024-08-17 00:57 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ரெயில் நிலையத்தில் இருந்து அகமதாபாத்துக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கபட்டு வருகிறது. இந்த ரெயிலானது இன்று கான்பூர் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டது. ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன.

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ரெயிலை முழுமையாக ஆய்வு செய்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. வேறொரு ரெயில் நிலையம் செல்ல ஏதுவாக பயணிகளுக்கு பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் கிடந்த பாராங்கல் மீது ரெயில் மோதியதன் காரணமாக இந்த விபத்து நடந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்