உத்தர பிரதேசத்தில் கார் மோதி 15 வயது சிறுவன் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் கார் மோதி 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;

லக்னோ,
உத்தர பிரதேசம் நொய்டா அருகில் உள்ள நல்கர்ஹா கிராமத்தை சேர்ந்தவர் சோகேஷ். இவருடைய மகன் ஆருஷ்(வயது 15).
இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள செக்டர்-145 மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சர்வீஸ் சாலையில் இன்று மாலை நேரத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஆருஷ் மீது மோதியது. இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து உயிரிழந்த சிறுவனின் தந்தை சோமேஷ் ஜீப்பின் எண்ணை போலீசாரிடன் தெரிவித்து புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஜீப் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.