கட்டிடக்கலை படிப்புகள் பற்றிய முழு விவரம்.. எங்கு படிக்கலாம்?
கட்டிடக்கலைபாடங்கள். கட்டடக் கலைபடிப்பில் பல்வேறு பாடங்கள் நடத்தப் பட்டாலும் சிலமுக்கிய விருப்பபாடங்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன;
கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளின் அமைப்பு முறைகளை, கலை மற்றும் அறிவியல் நுணுக்கங்களோடு வடிவமைப்பதை "கட்டிடக்கலை" என்றும் ஆர்க்கிடெக்சர் (ARCHITECURE ) என்றும் அழைப்பார்கள்.
குறிப்பாக, வீடுகள், ஆலயங்கள் ,உணவகங்கள், அலுவலகங்கள் போன்ற சிறந்த கட்டிடங்களை வடிவமைக்க கட்டிடக்கலை நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். கலை ஆர்வம் ம்ற்றும் கணிததிறன் கொண்டவர்கள் உற்சாகத்தோடு கட்டக்கலை படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.
பொதுவாக, "கட்டிடக்கலை படிப்பு என்பது கட்டடத்தை சிறந்தமுறையில் வடிவமைக்க மட்டுமே உதவும்"என சிலர் கருதுகிறார்கள்.
ஆனால், "கட்டிடக்கலைவல்லுநர்"என்னும்சிறப்பைபெறுவதற்கு ,ஒரு கட்டிடம் எப்படி உருவாகிறது? அதற்கான வடிவமைப்பு என்ன? உறுதித்தன்மையை எப்படி நிலை நாட்டுவது ?கட்டிடத்திற்கான மொத்த செலவு என்ன? கட்டிட காண்ட்ராக்டரிடம் எவ்வாறுஒப்பந்தங்களை மேற்கொள்வது? கட்டிடபாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவை?தரம் வாய்ந்த பணியாளர்களையும் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் என்னென்ன? என தெளிவாக தெரிந்துகொள்வது அவசியமாகும்.
கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் சில முக்கிய விருப்பபாடங்கள்
1.ஆர்க்கிடெக்சர் டெக்னாலஜி (Architectural Technology)
2.ஆர்க்கிடெக்சரல் இன்ஜினியரிங் (Architectural Engineering)
3.ஆர்க்கிடெக்சர் டிசைன் ( Architectural Design)
4.ஆர்க்கிடெக்சர் ஹிஸ்டரி (. Architectural History )
5.இன்டிரியர் ஆர்க்கிடெக்சர்( Interior Architecture )
6.லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர்Landscape Architecture
7.அர்பன் பிளானிங்Urban Planning)
கட்டிடக்கலை படிப்புகள்
கட்டிடக்கலை படிப்பில் பல்வேறு பட்ட மேற்படிப்புகள், பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன .அவற்றுள்சில..
பட்டப்படிப்புகள்
1.Bachelor of Architecture (B.Arch)
2.B.Voc Construction Technology
3.Bachelor of Planning (B.Plan)
4.B.Sc in Residential Space Design and Management
5.B.Tech in Urban and Regional Planning
பட்டமேற்படிப்புகள்
1.M.E in i) Housing ii) Landscape Architecture iii) Urban Design
2.M.Phil in Architecture and Settlement Conservation
3.M.Sc in Urban and Regional Planning
4.M.Tech in Urban Planning
டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்
1.Diploma in Architecture Assistant-ship,
2.Diploma in Interior Design,
3.Certificate in Interior Design
ஆன்லைன்கட்டிடக்கலைபடிப்புகள். (ARCHITECTURE ONLINE COURSES)
1.Design Like an Architect
2.Making Architecture
3.Introduction to Design and Management in Construction
4.Architecture Jobs
5.Architecture Draftsman
6.Interior Designer
7.Architectural Assistant
8.Landscape Architect
9.Architectural Journalists
10.Urban Planner
11.Lighting Architect
12.Research Architec
13.Restoration Architect
நேஷனல்ஆப்டிடியூட்டெஸ்ட்இன்ஆர்கிடெக்சர் (NATIONAL APTITUDE TEST IN ARCHITECTURE) (NATA) நேஷனல்ஆப்டிடியூட்டெஸ்ட்இன்ஆர்கிடெக்சர் (NATIONAL APTITUDE TEST IN ARCHITECTURE) (NATA) என்னும் நுழைவு தேர்வு, இந்தியாவில் கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட பட்டப்படிப்புகள் படிப்பதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு ஆகும்.
இந்தியாவில் சுமார் 375 கல்வி நிறுவனங்கள் இந்தபடிப்பை நடத்திவருகின்றன. கட்டிடக் கலைபடிப்பை நடத்தும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் நிகர்நிலைபல்கலைக்கழகங்கள்.ஐ.ஐ.டிஎன்.ஐ.டிமற்றும் தனித்துவம் பெற்ற கல்லூரிகள் இந்தநுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்மாணவர்சேர்க்கையைநடத்துகின்றன.
டெல்லியிலுள்ள மத்திய அரசின் அமைப்பான"கவுன்சில்ஆப்ஆர்க்கிடெக்சர்" ( COUNCIL OF ARCHITECTURE) என்னும்அமைப்பின்அங்கீகாரத்தோடு இந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வில் கீழ்க்கண்ட பாடங்களில் கேள்விகள் அமையும்
PART A - DRAWING AND COMPOSITION TEST - OFFLINE TEST - 90 MINUTES
A1 – 1 Question – Composition and Color -25 Marks
A2 - 1 Question – Sketching & Composition (Black and White)- 25 Marks
A3 – 1 Question - 3D Composition - 30 Marks
Total 3 Questions - 80 Marks
PART B - MCQ - COMPUTER BASED ONLINE TEST - 90 MINUTES
B1 - 30 questions x 2 Marks - 60 Marks
B2 - 15 questions x 4 Marks -60 Marks
Total 45 Questions – 120 Marks
TOTAL MARKS: PART – A & PART – B = 200.
இந்த நுழைவு தேர்வு எழுத பிளஸ்-1 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களும் ,தேர்வு எழுத தயார் நிலையி ல்இருப்பவர்களும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
மேலும், பிளஸ்-2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் தேர்ச்சிபெற்றவர்களும், தேர்வு எழுத தயார் நிலையில் இருப்பவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.
இவைதவிர, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றி பெற்று, மூன்று ஆண்டுகள் டிப்ளமோ தேர்வு எழுத இருப்பவர்களும், தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களும் இந்த நுழைவு தேர்வை எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இவர்கள் கண்டிப்பாக கணிதப் பாடத்தை டிப்ளமோ படிப்பில் படித்திருக்க வேண்டியதுஅவசியம் ஆகும்.
இந்தநுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் ,இந்தம திப்பண்களை இரண்டு கல்வி ஆண்டுகளுக்குபயன்படுத்த இயலும்.
மேலும்விவரங்களுக்கு –
COUNCIL OF ARCHITECTURE
India Habitat Centre, Core 6A, 1st Floor,
Lodhi Road, New Delhi-110003 India
Email: nataexam2024@gmail.com
Help Desk Phone: 080-45549467 ( Timing will be - 10.00 AM to 7.00 PM )
இவைதவிரhttps://www.nata.in/இணையதளத்தில்இந்தப்படிப்புபற்றியஅனைத்துவிவரங்களையும்தெரிந்துகொள்ளலாம்..