சரிவுடன் நிறைவடைந்த நிப்டி - இன்றைய இந்திய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று சரிவை சந்தித்தது.;

Update:2025-03-29 00:20 IST

 

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று சரிவை சந்தித்தது. அதன்படி, 72 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 519 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 191 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 414 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

11 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 564 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 63 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 74 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 30 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 546 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 213 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 542 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்