ரூ.59 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை... மக்கள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் பெற்று விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2024-10-29 04:55 GMT

சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வருகிறது. இதனால் 2 நாள் இடைவெளியிலேயே அதாவது, கடந்த 19ம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டியது.

அதனைத் தொடர்ந்தும் தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 23ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ.58,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ரூ.59 ஆயிரத்தை தொட்டுள்ளது . அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை தொட்டதால் நகை பிரியர்கள் மற்றும் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்