அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் விற்பனை
சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.;
![அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் விற்பனை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் விற்பனை](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/1500x900_36366135-untitled-4.webp)
கோப்புப்படம்
சென்னை,
தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன்பின்னரும் விலை ஏறி வந்த நிலையில், நேற்று முன்தினம் விலை குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்தே காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.60,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,595-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.