இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வருகிறது. இதனால் 2 நாள் இடைவெளியிலேயே அதாவது, கடந்த மாதம் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டியது.
அதனைத் தொடர்ந்தும் தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தங்கம் விலை கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரம் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ.58,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.58,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.106.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.