மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.320 உயர்வு

தங்கம் விலை நேற்று அதிகரித்து உயர்ந்த நிலையில், இன்றும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.;

Update:2025-03-27 09:51 IST
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.320  உயர்வு

சென்னை, 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு(சவரன்) ரூ.320 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8,235 க்கும், சவரன் ரூ.65,880-க்கும் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 40 அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-ஆக விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக உள்ளது. கடந்த 21 ஆம் தேதி முதல் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில், இன்றும் விலை உயர்வை சந்தித்து இருப்பது தங்க நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்