எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்பதை காண்போம்.;
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:-
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:-
அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.