கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.