கர்நாடகா தேர்தல்: பாஜக அலுவலகத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பு ; கட்சியினர் அலறியடித்து ஓட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.;
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி, 118 தொகுதிகள் முன்னிலையில் உள்ளது. பாஜக 73 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 25 தொகுதிகளும், மற்றவை 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முதல்-மந்தியுமான பசவராஜ் பொம்மை ஷிங்கான் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவர் எதிர்க்கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஷங்கான் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்திற்குள் நாகப்பாம்பு புகுந்தது. இதனால், தேர்தல் அலுவலகத்தில் இருந்த பாஜகவின் அலறியடித்து வெளியே ஓடினர். இது குறித்து உடனடியாக போலீசார், வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கபப்ட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாஜக அலுவலகத்தில் இருந்த நாகப்பாம்பை மீட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பாஜக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.