கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி ;தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது- தொண்டர்கள் உற்சாகம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

Update: 2023-05-13 02:30 GMT

பெங்களூரு,


Full View


Live Updates
2023-05-13 13:13 GMT

அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிக்ள்; 202

காங்கிரஸ்- 123 இல் வெற்றி

பாஜக- 56

மஜத- 19

2023-05-13 10:30 GMT

• காங்கிரஸ் : 137

• பாஜக : 63

• ,மதசார்பற்ற ஜனதா தளம் : 20

• மற்றவை : 4

2023-05-13 07:19 GMT

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், 129 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைபெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது.

அதேவேளை, 66 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் உள்ள பாஜக கர்நாடகத்தில் ஆட்சியை இழக்கிறது. கடந்த முறை 104 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை 66 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

2023-05-13 07:06 GMT



2023-05-13 06:54 GMT



2023-05-13 05:17 GMT



2023-05-13 04:47 GMT



2023-05-13 04:46 GMT



Tags:    

மேலும் செய்திகள்