கர்நாடக தேர்தல்; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளீயிடு..!
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.;
பெங்களூரு,
வருகிற 10-ந்தேதி சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி கர்நாடக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் வருகை, குற்றச்சாட்டுகளால் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளன. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தை முற்றுகையிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 6 முக்கியமான வாக்குறுதிகளை அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பாக இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சித்தராமையா, மாநில தலைவர் டிகே சிவக்குமார், தேர்தல் அறிக்கை குழு தலைவர் டாக்டர் பரமேஸ்வராஜி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் உள்ளிட்ட இலவசங்களை அறிவித்த நிலையில், பாஜகவுக்கு போட்டியாக ஏராளமான இலவச அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.