'தயவு செய்து பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்' - கர்நாடக மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

கர்நாடகாவில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது.;

Update: 2023-05-08 10:55 GMT

கொல்கத்தா,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம், வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாளை மறுதினம் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடக மக்களுக்கு மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக வாக்காளர்களுக்கு மம்தா பானர்ஜி விடுத்த வேண்டுகோளில், நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு வாக்களியுங்கள் என்பதே கர்நாடக சகோதர, சகோதரிகளுக்கு நான் விடுக்கும் ஒன்றை வேண்டுகோள். பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பாஜக மிகவும் ஆபத்தானது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்