கர்நாடக தேர்தல்: தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி பின்னடைவு...!

கர்நாடக சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான சிடி ரவி பின்னடைவை சந்தித்துள்ளார்.

Update: 2023-05-13 08:02 GMT

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இதில், காங்கிரஸ் 132 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 132 தொகுதிகளில் முன்னிலை பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ஆளும் பாஜக 66 தொகுதிகளில் மட்டும் முன்னிலை பெற்று தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தேர்தலில் தோல்வியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக பாஜக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சிடி ரவி சிக்மங்களூர் தொகுதியில் போட்டியிடார். அவர் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி சிடி ரவி 37 ஆயிரத்து 631 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பளர் தாமைய்யா 42 ஆயிரத்து 475 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இரு வேட்பாளர்களுக்குமான வாக்கு வித்தியாசம் சுமார் 5 ஆயிரம் உள்ள நிலையில் சிடி ரவி தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்