கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியில்லை என அறிவிப்பு
பாஜக கோரிக்கையை ஏற்று கர்நாடக தேர்தலில் போட்டியிடும் முடிவை வாபஸ் பெற்றதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது.இந்தநிலையில்,
அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான . எடப்பாடி பழனிசாமி அவர்களை இன்று (24.04.2023 - திங்கட் கிழமை), பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர் டி.. அன்பரசன் அவர்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி. அன்பரசன் அவர்கள் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் 2 பேர் வாபஸ் பெற்ற நிலையில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் அன்பரசனும் வாபஸ் பெற்றுள்ளார்.