2 நாள் சரிவுக்கு பிறகு மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.6,830
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தாறுமாறாக உயர்ந்து உச்சத்தை எட்டியது. சமீப காலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
சென்னையைப் பொருத்தவரை கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்ததது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்தது.
நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,785-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.99.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் சரிவுக்கு பிறகு இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,640-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,830க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 99.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,500-க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi