இந்தியன் வங்கியில் வேலை: 102 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்தியன் வங்கியில் 102 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2024-07-11 04:05 GMT

சென்னை,

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: இந்தியன் வங்கி

காலி பணி இடங்கள்: 102

பதவி பெயர்: ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் -துணை தலைவர், உதவி துணை தலைவர், இணை மேலாளர் உள்ளிட்ட பதவிகள் (ஒப்பந்த அடிப்படை)

பணி இடம்: சென்னை

கல்வி தகுதி: பி.இ, பி.டெக், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ போன்ற படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 14-7-2024 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 23; அதிகபட்ச வயது 40 (பதவியின் தன்மைக்கேற்ப வயது மாறுபடும்). அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-7-2024

இணையதள முகவரி: https://www.indianbank.in/career/

Tags:    

மேலும் செய்திகள்