ஐபிஎல் : மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2022-09-16 13:27 IST

மும்பை,

2023 ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஜெயவர்தனே அந்தப் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு ஒட்டுமொத்த மும்பை அணிகளின் செயல்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மார்க் பவுச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் வரும் டி20 உலக கோப்பை தொடருடன் பதவிலியிலிருந்து விலகுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்