பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

மோகனூர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-10-08 18:45 GMT

மோகனூர்

மோகனூர் காவிரி ஆற்றின் வடகரையில் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சாமி, பத்மாவதி தாயார் சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். இக்கோவிலில் ஆண்டு தோறும் திருமலையில் ஒரு நாள் வைபவம் நடப்பது வழக்கம். நேற்று திருமலையில் (திருப்பதி) பெருமாளுக்கு அதிகாலை முதல் இரவு வரை நடக்கும் சிறப்பு தரிசன பூஜை, இங்கு உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் சாமிக்கு நடத்தப்பட்டது. அதன்படி அதிகாலை சுப்ரபாதம், கோ தரிசனம், நவநீதி ஆர்த்தி, தோமாலை சேவை, அர்ச்சனை சேவை, சமர்ப்பணம் மற்றும் பலி சாற்றுமுறை நடந்தது. தொடர்ந்து வாரி சர்வ தரிசனம், உற்சவர் விசேஷ திருமஞ்சன சேவை, மதியம் சல்லிம்பு இரண்டாம் பலி, மாலை திருக்கல்யாணம், வாகன சேவை, இரவு நித்யோத்ஸவம், ஏகாந்தசவையும் நடைபெற்று ஒரு நாள் பள்ளியறையில் (கண்ணாடி அறையில்) பெருமாள் சாமி எழுந்தருளினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

==

Tags:    

மேலும் செய்திகள்