விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார்.

Update: 2023-09-12 18:36 GMT

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மாற்ற வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் அன்பு வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் நீதிநாயகம், நாமக்கல் தொகுதி துணை செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை செயலாளர் (ஆவண மையம்) பாலு என்கிற பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு முற்போக்கு மக்கள் பேரவை தலைவர் அக்னி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜ், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியா என்கிற பெயரை பாரத் என மாற்ற திட்டமிடும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்