தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்
நாமகிரிப்பேட்டையில் தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.
ராசிபுரம்
நாமகிரிப்பேட்டை அருகே பாலசுப்பிரமணியம் என்பவர் சாலையோர உணவகம் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தின் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. அந்த தொட்டியின் மேல் பகுதியில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளது. நேற்று அதில் இருந்து திடீரென களைந்த தேனீக்கள் உணவகத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களையும், சாலையில் சென்று கொண்டிருந்தவர்களையும் கொட்டின. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் நாமகிரிப்பேட்டை மற்றும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.