வருண் தேஜின் ஹாரர் காமெடி பட புரோமோ வெளியீடு

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது;

Update:2025-03-29 06:56 IST
VT15: Team unveils genre with a unique video

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகை வருண் தேஜ். இவர் சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால், ஆக்சன், பீரியட் டிராமாக்களில் இருந்து விலகி, தற்போது ஹாரர் காமெடி பக்கம் திரும்பி இருக்கிறார். வருண் தேஜ், இந்தோ-கொரிய திகில்-காமெடி படமான விடி15 படத்தில் நடிக்கிறார்.

மெர்லபாகா காந்தி இயக்கும் இப்படத்தின் பூஜை கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில், கொரியன் கனகராஜு என்ற கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்கிறார். ஹாய் நானா பட நடிகை ரித்திகா நாயக் கதாநாயகியாக நடிக்கிறார்.

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை புரோமோ வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்