விமல் - சூரி நடித்துள்ள 'படவா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விமல் - சூரி நடித்துள்ள 'படவா' படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2025-01-27 18:03 IST
விமல் - சூரி நடித்துள்ள படவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விமல் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'படவா'. இப்படத்தை கே.வி நந்தா இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜான் பீட்டர் இத்திரைப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக இருந்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக திரைப்படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படவா வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் 6 ஆண்டுகளுக்கு முன் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விவசாயம் பற்றி பேசும் சமூக பொறுப்புள்ள படமாக 'படவா' உருவாகியுள்ளது.

இப்படத்தில் நாயகியாக ஶ்ரீதா நடிக்கிறார். கேஜிஎப் ராம் வில்லனாக வருகிறார். தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர். சரவண சக்தி, சாம் உள்பட 40-க்கும் மேற்பட்ட நடிகர்- நடிகைகள் நடித்துள்ளனர். ஜே ஸ்டூடியோ இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்