"ஜன நாயகன்" படப்பிடிப்பில் ரசிகர்களை பார்த்து கை அசைத்த விஜய்

'ஜன நாயகன்' விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-04-13 20:37 IST

சென்னை,

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9ம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது

தற்போது சென்னை டி ஆர் கார்டன் போரூரில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது நடிகர் விஜய் ரசிகர்களை பார்த்து கை அசைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்